தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
தஞ்சை வந்த ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களிடம் கூறியதாவது:-
11 நாட்களாக நான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். சிதம்பரம் தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தற்போது 9 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன்.
அந்த தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு 40 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்ய உள்ளேன். இதே போல் என்னை ஆதரித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். அவர்களின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்து வருகிறேன்.
தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்தோம். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் அப்படி அல்ல. விஜயகாந்த் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முடியாத நிலையில், அவர்கள் சட்டமன்றத்தில் எப்படி ஒன்றாக இணைந்து மக்களுக்கு பாடுபட முடியும்,, 5 ஆண்டுகளாக தி.மு.க. அரசு செய்து வந்த திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
அதே போல் தற்போது தி.மு.க. கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை பெருகி வருகிறது. அதனால் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
nadri maalaimalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக