சிதம்பரம் தொகுதியின் திமுக கூட்டணி சார்பில் மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து நேற்று சிதம்பரம் 29&வது வட்டத்தில் உள்ள மன்னார்குடி தெரு, லால்பேட்டை தெரு, செங்கட்டான் தெரு, சோமசுந்தரம் தெரு உள்ளிட்ட தெருக்களில் திமுக கூட்டணி கட்சியினர் முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் தலைமையில் உற்சாகமாக உதயசூரியன் சின்னத்தை கிரீடமாக அணிந்து கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ்விஜயராகவன், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன், காங்கிரஸ் நகரத் தலைவர் வழக்கறிஞர் வேல்முருகன், மூப்பனார் பேரவை தலைவர் தில்லை மக்கீன், மூமுக நகரத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் மகளிரணியினர் கலந்து கொண் டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக