சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கிள்ளை பேருராட்சியில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவிந்திரன் தலைமையில் திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கை, சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சங்கர், இஸ் மாயில், தமிழ்வாணன், பாஸ்கர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அரங்கநாதன், சசிகுமார், ஆதித்தன், குமார், ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வரதராஜன், ஜோதிபாஸ், ராமதாஸ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஆதரவாக கிள்ளை கடைவீதியில் பேரூராட்சி தலைவர் கிள்ளைரவிந்திரன் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தா
நன்றி தினகரன் ஏப்ரல் எட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக