மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஓய்வின்றி உழைத்து வெற்றி தேடி தாருங்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

சிதம்பரம் : திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஓய்வின்றி உழைத்து இந்த அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும் என்று சிதம்பரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி பேசினார். புதுச்சேரி, கடலூரில் நேற்று திமுக 

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்தார். கடலூர் மஞ்சகுப்பத்தில் மாநாடுபோல திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நேற்றிரவு சிறப்புரை ஆற்றினார். இரவு சிதம்பரத்தில் தங்கிய முதல்வர் கருணாநிதி, இன்று 

காலை தனது சொந்த தொகுதியான திருவாரூருக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுகிலும் முதல்வருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆங்காங்கே திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிதம்பரம் காந்தி சிலை 

அருகே மூமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து கருணாநிதி பேசியதாவது; தமிழகத்தில் வரும் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல், உங்களை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. சிதம்பரம் தொகுதி வேட்பாளர் 

மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு உதயசூரியன் சின்னத்திலும், காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு மெழுகுவர்த்தி சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக, பாமக, மூவேந்தர் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. அனைவரும் ஒன்றுபட்டு வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். மறக்காமல் அந்தந்த 

வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள், மகளிர் அணியினர், இளைஞர்கள் ஒன்றுபட்டு ஓய்வின்றி பாடுபட்டு அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும். 
இந்த தொகுதியின் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் குடும்பத்துக்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மறைந்த முன்னாள் எம்எல்ஏ பொன்.சொக்கலிங்கம் அந்த தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தார். இந்த வாய்ப்பை தவறவிடாமல் அவரை 

வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை: