மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தி.மு.க. குழுவினருடன் மூவேந்தர் முன்னேற்ற கழகம்,பேச்சுவார்த்தை


தி.மு.க. குழுவினருடன் மூவேந்தர் முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை 
 ன்னர் ஸ்ரீதர் வாண்டையார் நிருபர் களிடம் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தஞ்சையில் நடந்தது. அதில் நாங்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும் தீர்மான கடிதத்தை இன்று தி.மு.க. குழுவினரிடம் வழங்கினோம். தமிழ்நாட்டில் 70 தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம். எங்களுக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது எங்களுக்கு எத்தனை தொகுதி என்பது முடிவாகும். இந்த தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

முதல் -அமைச்சர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடரும். இந்த கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள்.

இவ்வாறு ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்
நன்றி  நக்கீரன்

கருத்துகள் இல்லை: