மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

திங்கள், 6 டிசம்பர், 2010

2010 தெவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை

2010   தெவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர்  குருபூஜை   

பசும்பொன் தேவர் பெயரில் விருது வழங்க வேண்டும்

சும்பொன் தேவர் பெயரில் விருது வழங்க வேண்டும்
சிவகங்கை, அக். 28:
ஸ்ரீதர்வாண்டையார் பேட்டி
திருவள்ளுவர் தினத்தன்று பசும்பொன் தேவரின் பெயரில் விருது வழங்க வேண்டுமென மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் தெரிவித்தார்.
அவர் காளையார்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு மாவட்ட எல்லையை நீக்கி தமிழகத்தில் எங்கு வாழ்ந்தாலும் உரிய சாதிச்சான்று அரசு ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருவள்ளுவர் தினத்தன்று முக்கிய தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் பசும்பொன் தேவரின் பெயரில் விருது வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது, கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் அதன் உட்பிரிவுகளை தனித்தனி சாதியாக கணக்கெடுப்பு நடத்திடாமல் ஒரே தேவர் இனமாக கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்.
மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படாமல் எஞ்சியுள்ள கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் அதன் உட்பிரிவு இனங்களையும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மதுரை விமான நிலையம் மற்றும் மதுரை சட்ட கல்லூரிக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்.
சிவகங்கையில் கட்டப்படுகின்ற மருத்துவ கல்லூரிக்கு மருதுபாண்டியர்கள் பெயரை சூட்ட வேண்டும். முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனுக்கு அரசின் சார்பில் சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். பூலித்தேவன் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
கமுதியில் உள்ள பசும்பொன் தேவர் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும். இவற்றை தொடங்குவதற்கு கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தென்மாவட்டங்களில் அனைத்து பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட சமுதாய மக்கள் மீது போடப்பட்ட சாதி கலவர வழக்குகளில் சில வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மற்ற வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
மாநில தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், மாநில பொதுச் செயலாளர் காடுவெட்டியார், மாவட்ட தலைவர் நாகலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரதேவர், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர். முன்னதாக மருதுபாண்டியர் நினைவிடத்தில் ஸ்ரீதர்வாண்டையார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


கருத்துகள் இல்லை: