மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

வியாழன், 11 செப்டம்பர், 2008

மூவேந்தர் முன்னேற்ற கழகம்


மூவேந்தர் முன்னேற்ற கழகம்.முக்குலத்தின் முதல் சங்கமான (கள்ளர்,மறவர்,அகமுடையதேவர்) முக்குலத்தோர் சங்கம், விரமருது பிரேம்குமார் வாண்டையரால் நடத்தி செயல்பட்ட சங்கம் தான் முக்குலத்தோர் சங்கம் பின் மூமுகழகம் என துவங்கியது,பிரேம்குமார் வாண்டையார் மறைவுக்கு பின் வழி நடத்த வந்த தலைவர் வீரமருது ஸ்ரீதர் வாண்டையார்,முக்குலத்து மக்களின் உரிமைக்காக ஒற்றுமைக்காக போராடி வருகிறார்,மன்னர் பரம்பரை பிறந்த இந்த சமுதாயம் ,நாடு ஆண்ட பரம்பரை இந்த பரம்பரை! ஆனால் இன்று மிகவம் பாதிக்கபட்ட சமுதாயம் மாறி வருகிறது. மூணு அரை கோடி மக்கள் தொகை கொண்ட நாம் சாதிக்க முடியவில்லை ? காரணம் நம் இடைய ஒற்றுமை இல்லை !நாம் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் ,இதை தீயில் தூக்கி போட போராடியவர் பிரேம்குமார் வாண்டையார்.முக்குலத்து மக்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவிகளை செய்து வரும் ஸ்ரீதர் வாண்டையார்.முக்குலத்தின் தலைவர்களின் நிகழ்ச்சிகளை விழாக்கள் நடத்தி வருகிறார் பாதிக்கபட்ட மக்களின் உரிமைக்காக போராடி வருகிறார் ,விட்டு கொடுப்போம்!வாழ வைப்போம் ! மூவேந்தர் முன்னேற்ற கழகதில் சேர்ந்து போராடுங்கள்


Free Hit Counter

Free Counter
மூவேந்தர் முன்னேற்ற கழக கோரிக்கை மாநாட

மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேச்சு
கள்ளர், மறவர், அக முடையோரை தேவரினம் என்று அறிவித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பேசினார்.புதுக்கோட்டையில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில கோரிக்கை மாநாடு நேற்று முள்ளூரில் பிரேம்குமார் வாண்டையார் நினைவு திடலில் நடைபெற்றது. மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொது செயலாளர் சுப்பிரமணிய காடுவெட்டியார் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-நிலைமை மாறவேண்டும்இடஒதுக்கீட்டால் சமுதாயம் மிகவும் வஞ்சிக்கப்பட்டு உள்ளது. ஒரு காலத்தில் அதிகார வர்க்கமாக இருந்தோம். ஆனால் இன்றோ தலை கீழாக உள்ளோம். யாரையோ எதிர்பார்த்து உள்ளோம். இந்த நிலைமை மாற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றுகிற கலெக்டரில் ஒருவர் கூட நம் முடைய சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. போலீஸ்துறையில் எஸ்.பி ஆக விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஒருவர் உள்ளார் நீதி மன்றத்திலும் பெயரளவில் தான் உள்ளனர்.கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து தேவரினம் என்று அழைக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கை மாநாட்டிற்கு டாக்டர் சேதுராமன் மற்றும் அ.தி.மு.க, ம.தி.மு.க இந்திய முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த தலைவர்களும் வந்துள்ளனர். நாம் இப்போது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம். இடஒதுக்கீட்டை நாமும் பெற்று தீரவேண்டும். கல்வியில் உயர்ந்த நிலையை அடைந்து முன்னேற்ற பாதைக்கு சமுதாயத்தை கொண்டு செல்ல வேண்டும். அடுத்த தலைமுறையினர் நம்மை பார்த்து என்ன செய்து விட்டீர்கள் என்று கேட்டு விடக்கூடாது. அதற்காக தான் இந்த கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டையட்டி அவருடைய பிறந்தநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த மாநாட்டின் மூலம் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.இவ்வாறு ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்.

தேவர் ஜெயந்தி 2007
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட வேண்டும் ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி சிவகங்கை,அக்.28&மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கதேவர் பெயரை சூட்ட வேண்டும் ஸ்ரீதர் வாண்டையார் பேட்டி சிவகங்கை,அக்.28&மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்.


மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மருது பாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.இதன் பின்னர் காளையார்கோவில் பஸ் நிலையத்தின் அருகில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;&டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் தேவரின் இரண்டாம் படைவீட்டுக்கு அடிக்கல் நாட்டு விழா சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் 30&ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள எங்களுக்கும் அழைப்பு வந்துள்ளது. தேவரின் குருபூஜைக்கு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தினை பொறுத்து இந்த நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொள்வோம்.


மூவேந்தர் முன்னேற்ற கழகமும் , அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகமும் இரண்டு பிரிவாக பிரிந்து இயக்கங்களை தனித்தனியாக நடத்தினாலும் சமுதாய ஒற்றுமை, இட ஒதுக்கீடு உள்பட முக்கிய கோரிக்கைக்காக சேர்ந்து செயல்படுவது என்றும், 2 இயக்கங்களும் போராட்டங்களை ஒன்றாக நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூவந்தியில் அ.இ.மூ.மு.கழகத்தால் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் தலைவர்களின் படங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவர் விழாவை சிறப்பாக நடத்த உள்ள இந்த நேரத்தில் இது போன்ற செயல்களை செய்வது கண்டிக்கதக்கது. மதுரை விமானநிலையம், சட்ட கல்லூரி ஆகியவைகளுக்கு தேவர் பெயரை சூட்டவேண்டும். தேவரின் நூற்றாண்டு விழா நடைபெறும் சமயத்தில் எங்கள் 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மீதம் உள்ள 9 கோரிக்கைகளை வருகிற 30&ந்தேதி முதல்வர் அறிவிப்பார் என நம்புகிறோம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதரம் ஆகியவைகளில் எங்களுக்கு முன்னுரிமை வேண்டும்.


சென்னைக்கு அருகாமையில் நிலத்தின் விலை பல கோடி உள்ளது. ஆனால் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விலை மிக குறைவாக உள்ளது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வை சரி செய்ய தென் மாவட்டங்களுக்கு அன்னிய முதலீடு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். இந்த பகுதியில் பொருளாதார நிலை உயர நடவடிக்கை எடுக்க வேண்டும். கமுதியில் உள்ள தேவர் கல்லூரியை விரிவு படுத்தி அதை பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் கள்ளர் சமுதாயத்துக்கு மிகவும் பின்தங்கியவர் என்று ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இதை தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் கிடைக்கும் படி உத்தரவிடவேண்டும்.முக்குலத்தோர்களை தேவரினம் என்று முன்னாள் முதல்&அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அந்த உத்தரவு இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. அதை நடைமுறைபடுத்தவேண்டும். அத்துடன் தேவரினத்தை மிகவும் பின்தங்கியவர் பட்டியலில் சேர்த்து 10 சதவீதம் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்கள்பசும்பொன், காளையார்கோவிலில் அஞ்சலி செலுத்தவரும் மக்களுக்கு நிழற்குடை, அத்துடன் கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தரவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவர் பெயரிலும், சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர் பெயரிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் காடுவெட்டியார், ஆட்சி மன்ற குழு செயலாளர் அறப்பா, நிதிக்குழு செயலாளர் ஆறுமுகம் நாட்டார், மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரதேவர், தலைவர் நாகலிங்கம், செயலாளர் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

3 கருத்துகள்:

சிவகுமார் சொன்னது…

http://muthuramalingathevar.com/ இந்த இணையம் செயல்படவில்லையே நண்பா! இதிலுள்ள தகவல்களை எனது தளத்தில் பதிய நினைத்தேன், முடியவில்லை!

www.eegarai.com

V.RAGU NATHA SETHU PATHI சொன்னது…

உங்கள் பணிகள் மேலும் வளர வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் V.RagunathaSethuPathi.Sholavandan
http://sangankottai.blogspot.in/

Surya Printers சொன்னது…

நெல்லை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இளைஞர்களிடம் பெரும் எழுச்சி காணப்படுகின்றது. S. துரைப்பாண்டியன், நெல்லை மாவட்டத்தலைவர். 9944090323