மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

மூ.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் : தவ்ஹீத் ஜமா அத் கூட்டத்தில் தீர்மானம்

ரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க., கூட்டணி கட்சியான மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென பரங்கிப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நகர தலைவர் முத்துராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் பாசல் உசேன், நகர செயலர் சுப்புர் அலி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மூன்றரை சதவீதம் இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்துவோம். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் படி மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு தி.மு.க., பரிந்துரை. முஸ்லிம் கல்வி மற்றும் வழிப்பாட்டு தலங்களுக்கு உரிய பாதுகாப்பு எனவும் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தி.மு.க., கூட்டணி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் வெற்றிபெற பிரசாரம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மரைக்காயர், ஹபிபுர் ரஹ்மான், பைசல் உட்பட பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை: