மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

சனி, 4 ஜூலை, 2009

PASUMPON MUTHURAMALINGA THEVAR

1908_ம் வருடம் அக்டோபர் முப்பதாம் தேதி உக்கிரபாண்டித் தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும்மகனாகப் பிறந்தார் முத்துராமலிங்கத் தேவர். அவர் பிறந்தநாள் அன்று, அந்த பசும்பொன் கிராமமே திருவிழாக்கோலம் பூண்டது. அதற்குக் காரணம் தேவரின் தந்தை மிகப்பெரிய செல்வந்தர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உக்கிரபாண்டித் தேவர் என்றாலே தெரியும்விதமாக பிரசித்தி பெற்றிருந்தது அந்தக்குடும்பம். பிறந்தறு மாதத்திலேயே, அவரது அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்துவிட, அப்பா மறுமணம் செய்துகொண்டார். அதனால் முத்துராமலிங்கத் தேவரின் பாட்டி ராணியம்மாள் அவரை வளர்க்கும் பொறுப்பைப் பெற்றார்.கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற குணங்களோடு, தனது இளமையைத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள் முழுவதும் அதே குணங்களோடு வாழ்ந்தார். அதேபோல், அவர் ஒரு சித்தர் என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத் திகழ்ந்தார். `யாருக்காகவும், எதற்காகவும் தனது மத அடையாளங்களைமறைத்து வாழ முற்படக்கூடாது. அதே நேரத்தில், அந்த அடையாளங்களை இனம்காட்டி நமக்குள் நாம் பிரிவினையைத் தூண்டிக்கொள்ளக்கூடாது' என்பார்.ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம், சிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், ``நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்... இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?'' என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில்சொன்னார்.... ``ஐயா... ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்...மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்... அது வணங்குவதற்காக,தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக... கல் என்பது ஒன்றுதான். அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா...?'' _ சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்.வீரத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு நிகர் அவர்தான் என்பது போன்று, அவரது வாழ்நாளில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அவரது வாலிபப் பருவத்தில், ஒருநாள் தனது நண்பர்களோடு தேக்கடியில் பெரியாறு உற்பத்தியாகும் இடத்தைக் காண்பதற்காக இயந்திரப் படகில் சென்றார். அங்கே அவர்கள் குளிக்க முற்பட்டபோது, ஒரு பெண் பரபரப்பாக ஓடிவந்தாள்.``தம்பி என் பசுவை புலி அடிச்சிடுச்சி...'' என்று அழ ரம்பிக்க, சட்டென்று முத்துராமலிங்கத் தேவர், கரையை அடுத்திருந்த புதர்கள் அடங்கிய பகுதிக்குள் ஓட ஆரம்பித்தார்.அந்தப் பெண்ணும் சற்றுத் தயக்கமான முகத்தோடு தேவர் ஓடிய திசையை நோக்கி ஓடினாள். `என்னாகுமோ?' என்று அதிர்ச்சியாய் நண்பர்கள் காத்திருக்க... உடல் முழுவதும் காயத்தோடிருந்த பசுவோடு திரும்பி வந்தார் தேவர். அவருக்குப் பின்னால் சிரித்த முகத்தோடு அந்தப் பெண் வந்தாள்.``ரொம்ப நன்றிங்க தம்பி... மாட்டை அடிச்ச புலி உங்களை ஏதாச்சும் செஞ்சிடுமோன்னு பயந்துதான் வந்தேன்... நீங்க என்னடான்னா... அந்தப் புலியையே அடிச்சித் துரத்திட்டு என் மாட்டைக் காப்பாத்திட்டீங்களே...'' என்று சொல்லி நகர... நண்பர்கள் முகத்தில் வியப்பு தெரிந்தது.


அதேபோன்று, வேறொரு சமயம்... ஒரு படகோட்டி தவறவிட்ட இன்ஜினின் ஒரு பகுதியை, அறுபத்தேழு அடி ஆழம் தண்ணீருக்குள் சென்று எடுத்துவந்து கொடுத்து ஆச்சரியமூட்டியிருக்கிறார்.வீரத்தில் தேவருக்கு நிகர் தேவர்தான். இளமைக்காலத்தில் நீச்சல், மல்யுத்தம், வாள்வீச்சு, குதிரையேற்றம் என எல்லா கலைகளும் அவருக்கு கைவந்த கலையாக இருந்தன.தேவரின் முதல் மேடை முழக்கமே இடிமுழக்கமாக இருந்தது.சாயல்குடியில் விவேகானந்தர் வாசகசாலையில் விவேகானந்தரைப் பற்றியும் அவரது ஆன்மிக சிந்தனைகளைப் பற்றியும் முத்துராமலிங்கத் தேவர் பேசியதைக் கேட்டு அத்தனைபேரும் ஆச்சரியத்தில் வாய்பிளந்திருக்கிறார்கள் .அந்தக் காலத்தில் தலைசிறந்த தேசியத் தலைவராகத் திகழ்ந்த எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார், முத்துராமலிங்கத்தேவரின் நல்ல குணங்களை ஆன்மிக சிந்தனையும் வீரத்தையும் கண்டு அரசியலுக்கு வலுக்கட்டாயமாக அவரை அழைத்து வந்தார்.பின்னாளில் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் சாணக்கியத்தை, திறமையை, ஆளுமையை, நெறிதவறா பண்பைப் பார்த்து உள்ளம் மகிழ்ந்தவராக, ``தெய்வீக உடலில் தேசியப்புள்ளிகளைக் கொண்ட சேது வேங்கைமுத்துராமலிங்கத் தேவர்'' என்று பாராட்டினார்.அரசியல் சாணக்கியர் என்று பெயர்பெற்ற மூதறிஞர் ராஜாஜிகூட தேவரை... ``இந்திய சுதந்திர யுத்தத்தின் தென்புலத்திற்கு என்னைப் பார்த்தன் என்று புகழ்கிறார்கள். அந்த புகழுரையை நான் ஏற்பதாக இருந்தால்முத்துராமலிங்கத் தேவர்தான் என்னுடைய சாரதி...'' என்று அகமகிழ்ந்து கூறினார். 1937_ம் வருடம் பொதுத்தேர்தலின்போதுதான், முதன்முதலாக முத்துராமலிங்கத்தேவர் அரசியலுக்குள் நுழைந்தார்.அப்பொழுது தேவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவர் அன்று அரசியல் களத்தில் கால் வைக்காமல் இருந்திருந்தால் தென்புலத்தில் காங்கிரஸ் அடியெடுத்துவைத்திருக்க முடியாமல் போயிருக்கும். நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பூலாங்குறிச்சி வெள்ளியப்ப செட்டியார் என்பவருக்கு மக்கள் வாக்களிக்குமாறு பல பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து ஜஸ்டிஸ் கட்சியைச் சார்ந்த வேட்பாளருக்கு செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரும் மற்றும் சில செல்வந்தர்களும் பெரிய அளவில் உதவினார்கள். பணப் பலத்தோடு நடைபெறுகிற அந்த பிரசாரத்தை எதிர்த்து பசும்பொன் தேவர் கானோடுகாத்தானில் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்து பேசினார். பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் தேவரும் மற்றும் அவரது நண்பர்களான மானாமதுரை தேசபக்தர் கே.என்.எஸ்.நாராயண அய்யரும் வேறு சில பேச்சாளர்களும் அமர்ந்திருந்தார்கள். வீரத்துடன் தேவர் பேசிக்கொண்டு இருந்தபொழுது அழுகிய முட்டைகளும் தக்காளிப் பழங்களும் எங்கிருந்தோ மேடை நோக்கி வந்து விழுந்தன.அதோடு ஒரு கல் பசும்பொன் தேவரின் தலையைக் குறி பார்த்து வீசப்பட்டபொழுது சட்டென்று அங்கிருந்த நாராயண அய்யர் குறுக்கே தன் தலையை நீட்டி கல் தேவரின் மீது தாக்கப்படாமல் தடுத்தார். அதனால் அவருடைய தலையில் கல் மோதி இரத்தம் பீறிட்டது. மக்கள் ஆரவாரத்துடன் கொந்தளித்து எழுந்தார்கள். அவர்களை அமைதியாக இருக்குமாறு தேவர் சமாதானப்படுத்திக்கொண்டே தன் கதர் வேட்டியைக் கிழித்து இரத்தம் பெருகி வந்த நாராயண ஐயரின் தலையைச் சுற்றிக் கட்டினார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். வீசப்பட்ட கல்லை தேவர் தன் கையில் எடுத்துக்கொண்டு, "வெற்றி நமது காங்கிரஸ் வேட்பாளருக்கு என்பதற்கு இந்தக் கல்லே சாட்சி. என் சொல்லுக்கு மதிப்புக் கொடுங்கள்!" என்று மேடையில் கர்ஜித்தார்.
தமிழகத்தில் காங்கிரஸின் முதல் வெற்றிக்கு அவர்தான் காரணமென்பதை காங்கிரஸ் வரலாற்றில் பதிவு செய்தார். 1937 முதல் 1962 வரை நடந்த பொதுத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் அவர் வெற்றிபெற்று, `நான் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவன்'என்பதை உணர்த்தினார். இத்தனைக்கும் போட்டியிட்ட தொகுதிக்குச் செல்லாமலே... `அவர்களின் கஷ்டங்களை,தேவைகளை, உணர்வுகளை உணர்ந்தவன் நான்' என்பதை நிரூபித்து வெற்றி பெற்றார்.ஒருமுறை அவரைத்தேடி அமைச்சர் வாய்ப்பு வந்தபோதுகூட, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.தேவர் ஆங்கிலத்தில் புலமைவாய்ந்தவர். ஆனாலும், `தமிழ்தான் எனது மூச்சு' என்பார். `நான் ஆங்கிலம் கற்றது, ஆங்கிலம் தெரிந்தவர் நம்மை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக' என்று சொல்வார். தேவர் ஒருநாள் மேடையில் மிகவும் உணர்ச்சிகரமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் இடைநுழைந்து தேவரின் காதில் கிசுகிசுப்பாக ஏதோ சொன்னார். சட்டென்று கண்கள் சிவப்பாக... அனல்தெறிக்கும் கோபத்துடன் பேச ஆரம்பித்தார்... ``காமராஜரை நீதிக்கட்சியைச் சார்ந்த யாரோ சிலர் கடத்திக் கொண்டுபோய், எங்கோ மறைவிடத்தில் ஒளித்து வைத்திருப்பதாக எனக்குத் தகவல் வந்திருக்கிறது. அவரை யார் கடத்திக்கொண்டு போனது... எங்கே அவரை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பதுஎல்லாமே எனக்குத் தெரியும். அவரை ஒழுங்கு மரியாதையாக இந்தக் கூட்டம் முடிவதற்குள் இங்கே கொண்டு வந்து மேடையில் என்னிடம் சேர்க்கவேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு...'' என்று கர்ஜிக்கும் விதமாக, கோபமாகப் பேசிவிட்டு மீண்டும் கனிவான பேச்சைத் தொடர்ந்தார். அவருக்குப்பின் பலர் பேச...சில மணி நேரம் கூட்டம் நடந்தது. என்ன ஆச்சரியம்! கடைசி பேச்சாளர் பேச்சை முடிக்கும் முன்பாகவே தேவர் சொன்னதுபோல் காமராஜரை மேடையில் கொண்டுவந்து சேர்த்துவிட்டு தலைமறைவானார்கள் நீதிக்கட்சியினர். திருப்பரங்குன்றத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜியை எதிர்த்து காமராஜரை நிறுத்தி, அவரை தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக வெற்றிபெறச் செய்தவர் தேவர்.பார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியை நேதாஜி துவக்கியபோது. அது காங்கிரசுக்குள்ளேயே தீவிரவாதிகளைக் கொண்டதொரு சிறிய பிரிவாகத்தான் செயல்பட்டது. அதில் என்.ஜி. ரங்கா, கே.எம்.நாரிமன்,சேனாபதி பாபட், சரத் சந்திரபோஸ் கியோரோடு, மத்திய கமிட்டி உறுப்பினராகச் செயலாற்றியவர்முத்துராமலிங்கத் தேவர். 3.9.1939_அன்று சென்னை கடற்கரையில், தேவரின் வேண்டுகோளை ஏற்றுப் பேசிய நேதாஜி, ``தேவரைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அடுத்த பிறவியில் நானும் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்'' என்றார்.அதோடு மட்டுமில்லாமல்... நேதாஜியை அழைத்து மதுரையில் மிகப் பெரிய கூட்டம் நடத்த தேவர் ஏற்பாடு செய்ய... அலைகடலென திரண்டுவிட்ட கூட்டத்தைப் பார்த்து நேதாஜி, `தேவருக்கு இவ்வளவு செல்வாக்கா?'என்று மகிழ்ந்து போனார். னால் அந்தக் கூட்டமே, ஆங்கிலேய அரசு தேவரை நிழலாகக் கண்காணிக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது.பிரிட்டனில் நடந்த `இரண்டாம் உலகப் போரை எப்படி எதிர்கொள்வது?' என்ற விவாதத்தில் கலந்துகொண்டு மதுரை திரும்பிய தேவரை, ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையிலடைத்தது. ஆறு ண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு தேவர் விடுதலையாகி வெளியே வந்தபோது, நேதாஜி வெளிநாட்டில் இருக்கிறார் என்ற செய்தியை அறிந்தார். இந்தியா சுதந்திரமடைந்தபிறகு தேசியம், தெய்வீகம் இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதி,நேர்மையான அரசியல் தலைவராக வாழ்ந்தார்.``சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது மிகப்பெரிய அநியாயம். கடவுள் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிர, சாதியையும் நிறத்தையும் அல்ல... சாதியும், நிறமும் அரசியலுக்கும்கிடையாது... ஆன்மிகத்திற்கும் கிடையாது...'' என்பது முத்துராமலிங்கத் தேவரின் தாரக மந்திரம்.முத்துராமலிங்கத் தேவரின் வாழ்வியல், ஒவ்வொரு அரசியல் அபிமானிகளுக்கும் ஓர் அரிச்சுவடி...அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர், பசுபொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட. ஆனால் காலப் போக்கில் அவரது அந்தஸ்து மறைக்கப்பட்டது.......
அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது, அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின்மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது. தேவர்தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது! இம்மானுவேல் ஹிந்து தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர். பிற்காலத்தில் மீனாட்சிபுரம் ஹிந்து தலித்துகள் முகமதியராக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டதற்கு அது ஒரு முன்னுதாரணம்
இதன் பின் விளைவாகத்தான் தென் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற உயர் தகுதியில் இருந்த பசும்பொன் தேவர் காமராஜர் ஆட்சியால் ஒரு கொலை வழக்குக் குற்றவாளியாகச் சிறைவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ! தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான ஜாதிக் கலவரமாக அது தடம் புரண்டு வருந்தத் தக்க விளைவுகளை உண்டாக்கிவிட்டது. இந்த அடிப்படை உண்மையை காமராஜர் அரசு சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. பசும்பொன் தேவர் தேவர்மாரின் ஜாதித் தலைவராகக் குறுக்கப்பட்டார்.
இவ்வளவுக்கும் காமராஜருக்கு முதல் முதலில் விருதுப்பட்டி என்கிற பிற்கால விருதுநகரின் நகராட்சித் தேர்த்தலில் நிற்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவரே பசும்பொன் தேவர்தான்! ஒரு ஆட்டை வாங்கி காமராஜர் பெயரில் அதற்காக நகராட்சிக்கு வரி செலுத்தி அப்படியொரு தகுதியை காமராஜர் பெறச் செய்தார், பசும்பொன் தேவர். பிற்காலத்தில் காமராஜர் மாநில முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் பசுபொன் தேவர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்ச்சியை மிகவும் அலட்சியமான தொனியில் பகிரங்கப் படுத்தியதைக் காமராஜரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிலுக்குப் பசும்ப்பொன் தேவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்; இம்மானுவேல் கொலைப்பட்டது அவருக்கு வசதியாகப் போயிற்று!
.ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் . 33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார்.பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு பசும் பொன் தேவர் காலமானார். தேவர்மாரின் கடைசி விருப்பம் "என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி ஓ.... தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக் வேறு மாற்று உண்டா கூறு திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதையா ஏழை இனந்தான் போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே....
வெட்டறுவா தாங்கி....ஓ.... வீசுகிற ஊரில் ஓ....ஓ... வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில் வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே... நல்லவழி நீதான் சொல்லி என்ன லாபம் சொன்னவன் தானே சூழ்ந்ததின்று பாவம்
போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே.... தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தே...ஓய்... முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய்
எங்க உள்ளத்தந்தை.. தேவர் குல சிங்கம் எழில் முத்து ராமலிங்கம்.
.ஓ..ஓ..ஓ.. எழில் முத்து ராமலிங்கம்.
முருகா முருகா என்ற தாங்கள் முக்குலத்தின் மாபெரும் திங்கள் முருகா முருகா என்ற தாங்கள்
முக்குலத்தின் மாபெரும் திங்கள் குன்றினடியிலேயே இருந்தாய் குமரனையே நினைத்திருந்தாய் குன்றினடியிலேயே இருந்தாய் குமரனையே நினைத்திருந்தாய்
பசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய் பசும்பொன்னை காக்கவே பாரி வள்ளல் அடைந்தாய் பசும்பொன்


பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:
"தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும்" என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால், அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, "வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு" என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னாபார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள். அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)In what way Jinnah is not a North Indian? How is the names Jinnah and Robinson so sweet to you Sir? How is the name of poor Tilak so bitter to you Sir? I am notable to understand.ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன்? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன்? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்அல்லவா?ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது? அதற்கு மேல் "வடநாட்டான் திராவிட நாட்டைசுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம்" என்று சொல்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி.டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்'டால்மியாபுரம்' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா?ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த சௌந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய்? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவதுசொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த 'புரபகண்டா''செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம்? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம்' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே' என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம்' என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடியபோராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.'ரோமாபுரி ராணி' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை? எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி? ரோமாபுரி ராணி கதை போதாது என்று 'தங்கையின் காதல்' என்று ஒரு கதை எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய். அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே? வேறு என்ன?இதுவா தமிழ் நாகரீகம்?சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

2 கருத்துகள்:

Senthil சொன்னது…

நான் ஒரு தேவர் சமுதாயத்தில் வாழ்பவன் என்பதுக பெருமை அடைகிறேன் வாழ்க தேவர் சமுதாயம்

ayyappan சொன்னது…

pasumpon thevar patri muzuvathum arenthu konden.thevar patri ulagam arenthu kolla seithamaiku nantri.vazaka thevar samuthayam,valarka MMK.