மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

பக்கங்கள்

ஞாயிறு, 1 மே, 2011

வாண்டையார் மற்றும் தேவர் அமைப்பு எதிர்ப்பால் தெய்வத் திருமகன் பட டைட்டில் மாற்றம்

விக்ரம் நடித்துள்ள தெய்வத்திருமகன் படத்தின் தலைப்பு 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது.


விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம் நடித்துள்ள படம் தெய்வத்திருமகன். இப்படத்திற்கு முதலில் தெய்வமகன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் நடித்த அட்டகாசமான படம் இது. இந்தப் படத்தின் தலைப்பை விக்ரம் படத்திற்கு வைக்க நடிகர் பிரபு அதிருப்தி தெரிவிக்கவே, படத்தின் தலைப்பை தெய்வத்திருமகன் என்று மாற்றினர்.

இந்தநிலையில் இந்தத் தலைப்புக்கு முக்குலத்தோர் வகுப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக விக்ரம் வீட்டு முன்பு முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று தலைப்பை மாற்றுமாறு கோரி புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் படத்தின் தலைப்பு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விக்ரம் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக்கி வந்த தெய்வத்திருமகன் படத்தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேரிலும், கடிதம் வாயிலாகவும் மற்ற அமைப்பினரும் தங்கள் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அதில், தமிழக மக்களால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெய்வத்திருமகன்
என்று போற்றப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி தலைப்பை மாற்றிக் கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே அவர்களது நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தெய்வத்திருமகன் தலைப்பை விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றிக் கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

எனவே இத்திரைப்படத்தின் தலைப்பு விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ் 
http://thatstamil.oneindia.in/movies/specials/2011/05/deiva-thirumagan-title-has-changed-aid0091.html

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஓய்வின்றி உழைத்து வெற்றி தேடி தாருங்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

சிதம்பரம் : திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஓய்வின்றி உழைத்து இந்த அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும் என்று சிதம்பரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி பேசினார். புதுச்சேரி, கடலூரில் நேற்று திமுக 

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்தார். கடலூர் மஞ்சகுப்பத்தில் மாநாடுபோல திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நேற்றிரவு சிறப்புரை ஆற்றினார். இரவு சிதம்பரத்தில் தங்கிய முதல்வர் கருணாநிதி, இன்று 

காலை தனது சொந்த தொகுதியான திருவாரூருக்கு புறப்பட்டார். செல்லும் வழி நெடுகிலும் முதல்வருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆங்காங்கே திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிதம்பரம் காந்தி சிலை 

அருகே மூமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து கருணாநிதி பேசியதாவது; தமிழகத்தில் வரும் 13-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல், உங்களை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. சிதம்பரம் தொகுதி வேட்பாளர் 

மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு உதயசூரியன் சின்னத்திலும், காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு மெழுகுவர்த்தி சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக, பாமக, மூவேந்தர் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. அனைவரும் ஒன்றுபட்டு வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். மறக்காமல் அந்தந்த 

வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள், மகளிர் அணியினர், இளைஞர்கள் ஒன்றுபட்டு ஓய்வின்றி பாடுபட்டு அணிக்கு வெற்றியை தேடித் தரவேண்டும். 
இந்த தொகுதியின் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் குடும்பத்துக்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மறைந்த முன்னாள் எம்எல்ஏ பொன்.சொக்கலிங்கம் அந்த தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தார். இந்த வாய்ப்பை தவறவிடாமல் அவரை 

வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. பிரசாரத்திற்கே ஒன்று கூடாதவர்கள் சட்டமன்றத்தில் ன்றாக எப்படி செயல்பட முடியும்? ஸ்ரீதர்வாண்டையார் கேள்வி ஒ


தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
 
தஞ்சை வந்த ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
11 நாட்களாக நான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். சிதம்பரம் தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தற்போது 9 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளேன்.
 
அந்த தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு 40 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. இந்த 40 தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்ய உள்ளேன். இதே போல் என்னை ஆதரித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். அவர்களின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் நான் பிரசாரம் செய்து வருகிறேன்.
 
தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்தோம். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் அப்படி அல்ல. விஜயகாந்த் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முடியாத நிலையில், அவர்கள் சட்டமன்றத்தில் எப்படி ஒன்றாக இணைந்து மக்களுக்கு பாடுபட முடியும்,, 5 ஆண்டுகளாக தி.மு.க. அரசு செய்து வந்த திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
 
அதே போல் தற்போது தி.மு.க. கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை பெருகி வருகிறது. அதனால் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
nadri maalaimalar 

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மூமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து சிதம்பரம் 29வது வட்டத்தில்வாக்கு சேகரித்தனர்.


சிதம்பரம் தொகுதியின் திமுக கூட்டணி சார்பில் மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து நேற்று சிதம்பரம் 29&வது வட்டத்தில் உள்ள மன்னார்குடி தெரு, லால்பேட்டை தெரு, செங்கட்டான் தெரு, சோமசுந்தரம் தெரு உள்ளிட்ட தெருக்களில் திமுக கூட்டணி கட்சியினர் முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் தலைமையில் உற்சாகமாக உதயசூரியன் சின்னத்தை கிரீடமாக அணிந்து கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ்விஜயராகவன், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன், காங்கிரஸ் நகரத் தலைவர் வழக்கறிஞர் வேல்முருகன், மூப்பனார் பேரவை தலைவர் தில்லை மக்கீன், மூமுக நகரத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் மகளிரணியினர் கலந்து கொண் டனர். 
 
 





ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து கிள்ளை திமுக வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கிள்ளை பேருராட்சியில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் கிள்ளை ரவிந்திரன் தலைமையில் திமுக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கை, சாதனைகளை கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சங்கர், இஸ் மாயில், தமிழ்வாணன், பாஸ்கர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அரங்கநாதன், சசிகுமார், ஆதித்தன், குமார், ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வரதராஜன், ஜோதிபாஸ், ராமதாஸ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஆதரவாக கிள்ளை கடைவீதியில் பேரூராட்சி தலைவர் கிள்ளைரவிந்திரன் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தா

நன்றி தினகரன் ஏப்ரல் எட்டு

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

பரங்கிபேட்டை சுற்று வட்டார பகுதியில் ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தன

பரங்கிபேட்டை ரயில் அடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் சிதம்பரம் தொகிதியில் போட்டியிடு ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர் , இதில் தி.மு.க , காங்கிரஸ் , முஸ்லிம் லீக் , விடுதலை சிறுத்தை , TNTJ , பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்து ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்

பரங்கிபேட்டை பகுதி இஸ்லாமிய மக்களிடம்ஓட்டு கேட்டார் வாண்டையார்...




பரங்கிப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தி.மு.கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று மாலை பரங்கிப்பேட்டைக்கு வருகை தந்தார். பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம், வழியாக வந்த அவருக்கு, பாலத்தின் முகப்பில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்., பின்னர் ஸ்ரீதர் வாண்டையார், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் K.S.அழகிரி, பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், காண்டீபன், ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பரங்கிப்பேட்டையில் உள்ள பல தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரித்தனர்.



நகுதா மரைக்காயர் தெருவில் அமைந்திருக்கும் T.N.T.J. நகர அலுவலகத்திற்கு K.S.அழகிரி M.P., பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், காண்டீபன், ஆகியோருடன் வந்த வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அங்கிருந்த நகர T.N.T.J. நிர்வாகிகள் ஃபாஜுல் ஹுஸைன், முத்துராஜா, ஹபீப் ரஹ்மான் ஆகியோர்களுடன் கலந்துரையாடி தனக்காக தேர்தல் பணியாற்றும்படி கேட்டு கொண்டார்.

வாக்கு சேகரிக்கும் பணியில் ஏராளமான தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் தொடர் அணிவகுப்பாக சென்றதால் நேற்று மாலை பரங்கிப்பேட்டை பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை இயக்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் - தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்